தமிழ் பாடல் வரிகள் - காதல் ஓவியம்
தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...
அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...
இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..
********************************************************************************************************
பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ இரைவன் சபையில் இதுதான் விதியோ
(உன் பூஜைக்காக)
இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குணம் இது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை
இதயத்தில் இருந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது அவளின் முகதீபம்
பிரிய முடியாது பூமுகம் நினைவினில்
**************************************************************************
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்
(பூவில்)
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்
(பூவில்)
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம
*************************************************************************
வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்
(வெள்ளிச்)
உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home