Sunday, December 21, 2008

தமிழ் பாடல் வரிகள்- Salangai Oli

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

**********************************************************
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோகொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் ,,,,

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home