Wednesday, March 9, 2011

வாழ்க்கை

மிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது.....

வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்தோல்விகள் மட்டுமே
உனக்குஉளிகள் வழங்கும்என்பதை
உணர்ந்துகொள்...
மழை, நதி, விதைவிழுவதால் எழுபவை இவை..
நீ மட்டுமேன்விழுந்த இடத்திலேயேஉனக்கு கல்லறை கட்டுகிறாய்....
உன் சுவடுகள்சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்உன் பாதங்களை...
உன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....
நீவெற்றி பெற்றதாய் நினைக்கும்பல
இடங்களில்தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீதோற்றுப்
போனதாய்நினைக்கும்பல
தருணங்களில்வெற்றிதான் பெற்றிருப்பாய்...
உணர்ந்துகொள்
நீ
தோல்வியுற்றதுவாழ்க்கையிலல்லவாழ்க்கையை புரிதலில்...

1 Comments:

Blogger D.Martin said...

ஹார்லிக்ஸ் பருகியதைப் போல் தெம்பாக்கிவிட்டது கவிதை. நன்றி

March 16, 2011 at 3:07 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home